Friday, November 14, 2014

ராமேஸ்வரத்தின் வேறு சிறப்புகள் :

ராமேஸ்வரத்தின் வேறு சிறப்புகள் :

சிறப்புகள் :image.jpeg


பாதாள பைரவர் : ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு "பாதாள பைரவர்' என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

சுக்ரீவன் கோயில் : சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

காவியுடையில் இரட்டை விநாயகர் : பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் நிஜ பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

பதஞ்சலி முக்தி தலம் : பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம். பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால், நம் கண்களுக்கு தெரியமாட்டார்.

விபீஷணன் ஸ்தாபித்த ரங்கநாதர் : அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

மூன்றாம் பிரகார சிறப்பு : 
முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது.

ஸ்படிக லிங்க பூஜை : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இத்தலம், "சேதுபீடம்' ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

12 ஜோதிர்லிங்க தரிசனம்! : இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

விவேகானந்தர் வருகை : வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில்,""அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார்.

தூய்மையில்லாமல் கோயிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,'' என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

தீவுக்குள் ராமர் கோயில் : விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு "கோதண்டராமர்' என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான்.

அவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

ராமாயண திருவிழா : ராமநாதர் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர்.

ராமலிங்க பிரதிஷ்டையின்போது ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.

வால் இல்லாத ஆஞ்சநேயர் : 
கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார். ஆனாலும், அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது. ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில், சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம்.

சீதையை மீட்பது குறித்து ராமர் ஆலோசித்த இடத்தில், "ராமர் பாதம்' இருக்கிறது.  பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.

கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு.  வடநாட்டு பக்தர்கள் தலையில் ராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு ராமநாத சுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்: - சிறப்பம்சம்



                               image.jpegimage.jpeg

முதல் தரிசனம் : ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, "விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
உப்பு லிங்கம் : ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.
  அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை     இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 
விஞ்ஞானம் அடிப்படையில்: 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது.

சிறப்பம்சம்:

தீர்த்தமாடுவதின் பலன் : 
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

தீர்த்தமும் பலனும்:
1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்:  வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
 9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
 14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்:


                     image.jpeg


தல வரலாறு:

சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம்அமைத்தாள். அந்த லிங்கத்தை ராமர் பூஜித்ததால் "ராமநாதசுவாமி' என்ற திருநாமம் அமைந்தது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.

 தலபெருமை:

காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.

கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும்.
சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்: புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார். "மகாளயம்' என்றால் "கூட்டமாக பூமிக்கு வருதல்' எனப்பொருள். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.

ஜோதிர்லிங்கம் : சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று ராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.
இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, "ஜோதிர்லிங்கம்' ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது

பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமர் வழிபட்ட தலம் இராமேஸ்வரம்

சிவ தரிசன பலன்
நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிவ தரிசனத்திற்கும் நிச்சயம் அளவற்ற பலன் உண்டு. எங்கோ எப்போதோ யாருக்கோ செய்த பாவங்கள் கூட ஈஸ்வரனை தரிசிக்கும்போது பஞ்சாய் பறந்து போகும். பாவங்களை கழுவிக் களைவதில் ஈஸ்வரனுக்கு நிகர் ஈஸ்வரனே. ஆகையால் தான்  புராணங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைவரும் பாவங்களை தீர்க்க பரமேஸ்வரனை பூஜிக்கிறார்கள்.
பொதுவாக ஒருவருக்கு நாம் தீங்கிழைத்துவிட்டாலோ, பாவமிழைத்துவிட்டாலோ சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் மன்னித்தால் தான் நாம் பாவத்தை போக்கிக்கொள்ளமுடியும். அவர்களுக்கு தீங்கிழைத்துவிட்டு வேறு ஒருவரிடம் போய் மன்னிப்பு கேட்டால் அது செல்லுபடியாகாது. அதாவது பாவம் ஒரு இடம் பரிகாரம் ஒரு இடம் என்று செய்யமுடியாது.
ஆனால், பரமேஸ்வரனை தஞ்சமடைவதால் மட்டும் எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம். பிரசித்தி பெற்ற ஆலயங்களின் அனைத்து தல வரலாறுகளிலும் இந்த பேருண்மையை நீங்கள் காணலாம்.
          பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமர் வழிபட்ட தலம் இராமேஸ்வரம்  ஆகும் 

இந்திரன் முதலிய தேவாதி தேவர்கள் வரை தாங்கள்  செய்யும் பாவங்களுக்கும் தவறுகளுக்கும் பரிகாரமாய் ஈஸ்வர பூஜை தான் செய்வார்கள். பரமேஸ்வரனைத் தான் பூஜிப்பார்கள். அவனைத் தான் தொழுவார்கள். ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான்.சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம்அமைத்தாள். அந்த லிங்கத்தை ராமர் பூஜித்ததால் "ராமநாதசுவாமி' என்ற திருநாமம் அமைந்தது. 

ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு ராம ஈஸ்வரம் என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. 
ராவணனை கொன்ற பாவத்தினை  போக்க‌,சிவ பூஜை செய்ய ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.
ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.

ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, "விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. 
பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமர் வழிபட்ட தலம் இராமேஸ்வரம்  ஆகும் 

Sunday, November 9, 2014

மந்திர ஜெபம் செய்யும் முறை

மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன ஆகும். சில மந்திரங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், சில பகையை வெல்லவும் பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை மானிடர்களின் நலனைக் கருதியே வெளிப்படையாக வெளியிட்டனர்.  
மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய விரிப்பில் (மான் தோல், புலித்தோல், உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.
கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது. அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும்.
மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது. அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும்.
மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும். 
மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது.
யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது. 
பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.
மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. மந்திர உச்சாடணம் செய்வதற்கு முன்னர் வினாகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.
முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும். 
மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜெபிப்பதே சிறப்பு. தகுந்த குருவினால் மட்டுமே மேலே சொல்லப்பட்ட சகல விடயங்களிலும் சரியான வழியினைக் காட்ட முடியும்.
 முறைப்படி மந்திர உச்சாடணம் செய்து வாழ்வில் சகல வளமும், சகல நலமும் பெறுவோமாக.

யந்திரங்களின் வலிமை

மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற முடியும். சக்தி எற்றப்பட்ட யந்திரங்களின் வலிமையினால் சகல செயல்களையும் செய்ய முடியும்.
நெருப்பினைக் கொண்டு தீபத்தினை ஏற்றுவதா அல்லது வீட்டினைக் கொளுத்துவதா என்பதினை தீர்மானிப்பது நெருப்பு அல்ல மனிதர்களாகிய நாம் தான். அதே போலத் தான் மந்திரங்களையும் நல்ல காரியத்திற்கு நாம் பயன்படுத்தினால் அது நன்மையையும் தீய காரியத்திற்கு பயன்படுத்தினால் அது தீமையையும் தர வல்லது.
யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது குறிப்பிட்ட காலம்வரைதான் நிலைத்திருக்கும். கோயில்களில் இருக்கும் சக்தியானது மூலவரிற்கு கீழே வைக்கப்படும் யந்திரத்தகட்டினாலேயே உண்டாகிறது. இந்த தகடு யாகங்கள் மூலம் உரு கொடுக்கப்படுகிறது. அத்துடன் நித்திய பூசைகள் முறைப்படி செய்யப்படுகின்றன. இதன் கால அளவு 13 வருடகாலங்கள். அதனாற்தான் 13 வருடத்திற்கு ஒரு முறை கும்பாவிசேகம் செய்யப்பட்டு யந்திரத்தகடுகள் புதிப்பிக்கப்படுகின்றன.
மந்திரங்கள் அந்தந்த மந்திரங்களை ஜெபிப்பவனை காக்கும். ஒரு செயலை நினைத்து அந்த செயலிற்குரிய மந்திரத்தை முறைப்படி குரு முகமாக தீட்சை பெற்று முறைப்படி ஜெபித்து வந்தால் அந்த காரியம் நினைத்தபடி சித்தியாகும். தேவதைகளிற்குரிய மந்திரங்களை குரு முகமாக தீட்சை பெற்று அதற்குரிய நியமத்துடன் ஜெபித்து வந்தால் அந்த தேவதைகள் நேரில் பிரத்தியட்சமாகி மந்திர ஜெபம் செய்பவரிற்கு சகல சித்திகளையும் அருளும்.
மகா மந்திரங்களை மந்திரமுணர்ந்த குருவிடமிருந்து தீட்சை மூலமாகவே தெரிந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமான சாந்த மந்திரங்கள் பஞ்சாட்சரி, தூல பஞ்சாட்சரி, சடாட்சரி, ஏகாட்சரி, பஞ்ச பிரம்மம், மாலா, சூடாமணி, சிந்தாமணி, திரிபுரசுந்தரி, அன்னபூரணி, மிருத்யுஞ்சு ஜெயம், தட்சிணாமூர்த்தி, கணேசர், விஷ்ணு, ருத்திரன் போன்றன.
மந்திரங்களை மந்திர நிகண்டு, கொங்கணவர் நடு படைக் காண்டம், திருமந்திரம், அகத்தியர் மாந்திரீக காவியம் மற்றும் பல சித்தர்களின் நூல்களில் தெளிவாக காணலாம்.
ரிஷி அனுஸ்டானம் இல்லாத மந்திரம் ஆயுளைக் கெடுக்கும். தவறான உச்சரிப்பு, தவறான ஒலி வியாதியைக் கொடுக்கும். தேவாதீனமான மந்திரங்கள் செல்வத்தை அழிக்கும். ஆயுதம், வஸ்திரமின்றி செய்யப்படும் மந்திரங்கள் புத்திர, பந்துக்ளை நாசம் செய்யும். முறைப்படி தெரிந்து முறைப்படி ஜெபிக்கப்படும் மந்திரங்களே சகல நன்மைகளையும் இம்மைக்கும், மறுமைக்கும் தரும்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்)

மனதை செம்மைப்படுத்த மந்திரம் அவசியம் என்பதனை அகத்தியர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாட்சர மந்திரம் என்பது பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் மந்திரமாகும். ஒவ்வொரு பூதத்திற்கும் எழுத்து, வரிவடிவம் உள்ளது. அதாவது ந – ம – சி – வ – ய என்ற எழுத்துகளாகவும், வட்டம், ஐங்கோணம், அறுகோணம், சதுரம், முக்கோணம் போன்ற வரிவடிவங்களாயும் உள்ளன.

மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற முடியும். 

மந்திரம் part1


மந்திரம் என்பது ஒருவகை சக்தியாகும்.
மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு சாதனமாகும். மந்திரங்கள் நம் எண்ணங்களை வலுப்படுத்தி, ஆற்றலை வளர்த்து, மனச் சஞ்சலத்தைக் குறைத்து, மனதை அமைதிப் படுத்தி நம்மிடத்து நல்ல எண்ணங்களை வளர்க்கும் ஆற்றல்பெற்றவை.சொல்லப்போனால் மந்திரம் என்பது ஒரு வகை சக்தியாகும். நெருப்பு என்ற சக்தி எப்படி தீபமாக இருந்து ஒளியைக் கொடுத்து நமக்கு நல்ல செயல்களைச் செய்கிறதோ அதோ போல் மந்திரங்களும் நல்லவற்றை செய்ய வல்லன. 
மந்திரம் என்பது ஒருவகை சக்தியாகும். ஒலி வடிவிலானது. ஒலியலைகளைக் கொண்டு செயலாற்றும் தன்மையுடையது. மனதில் நினைத்ததை நினைத்தபடியே செயலாற்ற வைக்கும் சக்தி கொண்டது. அந்த சக்தியை எத்தகைய செயலையும் செய்து சாதிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதனைக் கொண்டு சாதிக்க முடியாது மிக மிக அரிது என்றே சொல்லலாம்.

பஞ்ச பூதங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஆகாயத்திலிருந்தே மற்றய நான்கு பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று தோன்றியதாக கருதப்படுகிறது. மந்திர ஒலியானது பஞ்ச பூதங்களிலும் பாயக் கூடியது. நாம் எழுப்பும் மந்திர ஒலியானது காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றய பூதங்களையும் தாக்கி செயல்படுகிறது. மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள் உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும். மந்திரங்களில் பயன் படும் ஒவ்வோர் எழுத்திற்கும். ஒலிக்கும் வலிமையும், அந்த ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும் கொண்டவை.
மனம் சலனமுள்ளது. நிலையற்று இயங்குவது. அப்படிப்பட்ட மனதை அசைவற்று, சலனமற்று இருக்க என்ன செய்வது என்ற சிந்தனையின் வெளிப்பாடே மந்திரம் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி ஒரு நிலைப்படுத்த மந்திரம் மிக மிக சிறப்பான வழியாகும்.மனித எண்ணத்தினது சக்தி மற்ற எல்லா சக்திகளையும் விட வலிமையானது வேகமும் அதிகமானது என்று தற்கால விஞ்ஞானம் ஒப்புக் கொண்டுள்ளது. ஒலியைவிட விரைவானதும் சக்தி வாய்ந்ததும் சிந்தனா சக்தி எனப்படும் மனோசக்தி ஆகும். இந்த சக்தியை எளிதில் தோற்றுவிக்க உதவுதே மந்திரங்களாகும்.
மந்திர சாத்திரத்திற்கு முக்கியமானது எழுத்துக்களும் அவற்றிற்கான ஒலி அலைகளுமே ஆகும். இப்படி எழுத்துக்களை கொண்டு செயலாற்றும் மந்திரங்களை “வர்ணாத்ம சப்தம்” என வழங்குவர். வெறும் ஒலியலைகளை மட்டும் கொண்டும் மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியும். இந்த வகை மந்திரங்களை “துவனியாத்ம சப்தம்” என வழங்குவர்.
பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள் தனது அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்; அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால் தானாகவே இந்த பொருள் அதிரும் என்று நிருபிக்கப்பட்டுள்து. அந்த தத்துவமே மந்திரங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

மந்திர சாதனை பயிற்சி - ஸ்வாமி சச்சிதானந்தா

  மந்திர ஜெபம் செய்யும் முறை 

ஸ்வாமி சச்சிதானந்தா அவர்கள் மந்திர சாதனை பயிற்சியையும், மந்திர சித்தி அடைதலையும் எளிய உதாரணத்தில் விளக்குவார். குரு என்பவர் ஓர் பீஜ மந்திரத்தை கொடுப்பது என்பது பாலில் ஒருதுளி தயிரை சேர்ப்பது போன்றது. பால் போன்ற சிஷ்யனின் உள்நிலையில் ஓர் சிறிய மந்திரம் அவனை தயிராக மாற்றும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்தால், தயிரை மத்தால் கடைவதை போல கடைந்து கடைசியில் வெண்ணையாக அவனது மந்திர சித்தி கிடைக்கும். இதை பக்குவமாக ஆன்மீகம் எனும் தன்மையில் உருக்கினால் என்றும் அழியாத முக்தி எனும் நெய் கிடைக்கும். மந்திர யோகத்தை இதை விட எளிமையாக கூறமுடியாது என எண்ணுகிறேன்.


மந்திர ஜெபம் செய்யும் முறை மிகவும் முக்கியமானது.
1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.

2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை.

3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும். 

4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.

5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.

6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும். 

7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும். 

8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும். 

9. எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு.

இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.
வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது. 

10. சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஜெபத்தால் ஞாபக சக்தி, கூர்மையாக சிந்தித்தல், வேகமான செயல் போன்றவை ஏற்படும். நோய் உள்ளவர்களுக்கு அருகில் இருந்து ஜெபம் செய்தால் அவர்களுக்கு உடலில் முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம். மேலும் மந்திர ஜெபத்தை பிறர் நலனுக்கு பயன்படுத்தினால் மிக வேகமாக செயல்படும்.

மந்திர சாஸ்திரத்தை பற்றி விவரித்து சொன்னால் பல விஷயங்களை கூறலாம். மதங்கள் சடங்குகளை கடந்த மெய் ஞானத்தின் திறவுகோலான மந்திர யோகத்தை குருவின் மூலம் பெற்று உள் நிலையில் பூரணத்துவம் பெறுவோம். 

ஸ்ரீ மகாகணபதி மந்திரம்:-

தெய்வங்களிடமிருந்து அருள் பெற நாம் ஸ்தோத்திரம், கவசம், நாமாவளி, மந்திரம் இவற்றை செய்து வருகிறோம்.நிபந்தனையற்ற ஆழ்ந்த அன்புடன் அழைத்தால் எந்த தெய்வமும் உடனே வந்து அருள் செய்யும்.நமக்கு அந்த  அளவுக்கு அன்பும் பக்தியும் செய்ய தெரியாததால் நாம் மேற்காணும் வழிகளை பின்பற்றுகிறோம்.அவற்றுள் மிக விரைந்து பலன் தருவது மூலமந்திரங்களே.

மூலமந்திரங்களை ஜெபிக்கும் போது ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு சில விதிமுறைகள் உள்ளன அவற்றைப் பின்பற்றினால் உயர்ந்த பலன்கிட்டும்.

எல்லாருக்கும் எல்லா மந்திரங்களும் பலிப்பதில்லை.மேலும் தேவையில்லாமல் கண்டகண்ட துர்மந்திரங்களை ஜெபிக்காமல் சாத்வீக மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.

முதலில் விநாயக மந்திரத்தைச் சித்தி செய்து கொள்ளவேண்டும்.

எல்லா தெய்வ வடிவங்களுக்கும் ஒரு உயர்ந்த தத்துவார்த்த விளக்கம் உள்ளது.விநாயகருக்கான  விளக்கம்.

1.அவருக்குண்டான தனிப்பெரும் அடையாளம் துதிக்கை அதன் பொருள் மூச்சு ஆழமாக இழுக்கப்பட வேண்டும்.

2.காதுகள்-வலது காதிலிருந்து இடது காது வரை துதிக்கையையும் சேர்த்து உற்று நோக்கினால் ஓம்கார வடிவம்.

3.இருந்த இடத்திலிருந்தே பிரபஞ்ச இயக்கம்,ஜோதிடம்,வைத்தியம் யாவற்றையும் அறிந்த ரிஷி,சித்தர்கள் யானையான விநாயகருக்கு எலியை வாகனமாக ஏன் வைத்தார்கள் என்பதற்குத் தரும் விளக்கம்.எலி எப்போதும் வெளிச்சத்தில் நடமாடுவதோ தங்குவதோ கிடையாது.அதுபோல்   மூலதாரத்திற்கு அதிதெய்வமான  கணபதி எலியின் மேல் அமர்ந்திருப்பது   எலியைப்போல் மனம் இயல்பு நிலையில் அல்லது மூலாதாரச்சக்கரம் செயல்படுகின்றநிலையில் இருள் போன்ற தீய விஷயங்களைப்பற்றியே செயல்படும்.எனவே அதுபோன்ற மாயையில் இருந்து உயர எலியாகிய நம் மனம் கீழேயும்,நம் மூச்சு ஆழமாகவும் இழுக்கப்பட்டு யோக நிலையில் இருந்து நம் வினைக்கு நாமே நாயகனாக இருக்க வேண்டும் என்பதாகும்.


விநாயகருக்கு 51 வகையான வடிவங்கள் உண்டு அதற்கென்றுள்ள  பிரத்யேக மந்திரங்களும் உள்ளன.அவற்றில் நம் விருப்பம் நிறைவேறத்தகுந்த மந்திரங்களையும் அதன்  பிரயோகங்களையும் பார்க்கலாம்.


ஸ்ரீ மகாகணபதி மந்திரம்:-

1.ஓம் ||ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ||க்லௌம் கம் கணபதயே|| வரவரத சர்வ ஜனம் மே|| வசமானய ஸ்வாஹா||

மேற்கண்டவாறு இம்மந்திரத்தை 5 இடங்களில் சிறிது நிறுத்தி ஜெபிக்கவும்.இதனை கிழக்கு முகமாக அமர்ந்து முதல் நாள் 27 முறை பின்னர் 54,108 என்று இயன்றவரை  ஜெபித்துவரவும்.

மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.இம்மந்திரத்திற்கு ரிஷி கனக ரிஷி  .
மந்திர சாஸ்திரத்தின் உயர்ந்த வித்தையான ஸ்ரீ வித்யையில் இதுவே முதல் உபதேசமாக வழங்கப்பட்டு வருகிறது,மேலும் இதுவே  மந்திர சாஸ்திரத்தின் முதல் படி என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் கிட்டும் பிரதான பலன் சத்வகுண சுத்தி எனப்படும் எண்ணத்தூய்மை.தேஜஸ்,செல்வம்,சௌபாக்கியம்,சர்வ ஜீவராசிகளும் மனிதன் உட்பட வசீகரம் ஆகி அதாவது எல்லா உயிர்களுடனும் இணக்கமான உறவு கொண்ட நல்வாழ்வு கிடைக்கப்பெறும்.

இம்மந்திரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் ஜெபிப்பது 100 % பலன் தரும்.அல்லது இளஞ்சூரியன் உள்ள நேரத்திற்குள் ஜெபிப்பது நலம்.வசதி இல்லாதவர்கள் நேரம் கிடைக்கையில் ஜெபிக்கலாம்

மந்திரங்களை உபதேசம் (தீட்சை) பெற்று ஜெபிப்பதே நிறைவான பலன்களைத் தரும்.
உபதேசம்,யந்திரம்,பூஜை முறைகள் தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட மொபைல்  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பூஜிக்கப்பட்ட ஸ்ரீ கணபதி யந்திரம் வைத்துப் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து வரக் காரியத்தடைகள் நீங்கி வளமான வாழ்வு அமையும். நிறைந்த பலன் கிட்டும்.யந்திரம்,ரக்ஷை,குங்கும பிரசாதம் தேவை உள்ளவர்கள் கீழ்க்கண்டமொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்யந்திரமும் பூஜை முறைகளும் அனுப்பப்படும்.

மந்திரங்கள் உச்சரிப்பதின் பலன்கள் :

மந்திரங்கள் உச்சரிப்பதின் மகத்தான பலன்கள் :  
 மனிதனுக்கு உள்ள ஆறாம் அறிவைக் கொண்டு - அடுத்த நிலையை அறிய உணர்வதில் - ஒரு சீரான சப்த அதிர்வுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இதைப் போன்ற தேவதை வசிய சக்தியை உடையவை - மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. 

வேதத்தில் மந்திர சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது.  மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடையலாம். யோக சாஸ்திரம் பரமாத்மாவை அடையும் பல வழிகளை கூறுகிறது.
ஓர் எளிய வார்த்தைக்கு என்ன சக்தி இருக்க முடியும் என எண்ணத் தோன்றும். உண்மையில் மந்திரத்தின் வார்த்தையைக் காட்டிலும் அதை பயன்படுத்தும் விதம் (ப்ரயோகம்) மற்றும் பயிற்சியே (சாதனா) முக்கியம்.

மந்திர உச்சாடனம் செய்யும் பொழுது நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் சலனம் ஏற்படுகிறது.
பிரபஞ்ச ஆற்றலில் சில விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சலனம் முடிவில் நாம் அடையவேண்டிய இலக்கை அடைகிறது.
மந்திர ஜெபம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் சலனத்தை தெளிவாக்குகிறது.

கலங்கலான நீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு நாணயத்தை இடும்பொழுது அனைத்து தூசும் அந்த நாணயம் இருக்கும் இடத்தை அடையும். நீர் தெளிவடையும்.
எப்பொழுதும் சலனம் கொண்ட நீர் போன்ற மனதில் மந்திர ஜெபம் செய்யும் பொழுது எண்ண அலைகள் மந்திரத்துடன் அடங்கி மனம் தெளிவடையும்.மனம் ஒடுங்கியதும், மனதின் மூலத்தைக் காண்பதே மந்திர ஜெபத்தின் நோக்கம். 
அதனால் தான் யோக முறையில் ஜெபயோகம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெபம் என்றால் தொடர்ந்து உச்சரிப்பது என பொருள்படும். ஜெபம் மற்றும் அஜெபம் என இரு தன்மைகளை கொண்டது, மந்திரஜெபம். தூய்மையான மனதுடன் மந்திரத்தை உச்சரிப்பது மந்திர ஜெபம் எனப்படும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்த பின்பு வேறு நடவடிக்கைகள் செய்யும் பொழுது நம்மை அறியாமல் மனம் ஜெபம் செய்து கொண்டிருக்கும். இது அஜெபம். அதாவது சமஸ்கிருத சொல்லான அஜெபம் ஜெபிக்காத ஜெபம் என மொழி பெயர்க்கலாம்.

உலகில் உள்ள அனைத்து மதத்திலும் மந்திர ஜெபம் உண்டு என்பது இதன் சிறப்பை பறைசாற்றும். எனவே மந்திர ஜெபம் சமயங்கள் கடந்த இறைநிலை காட்டும் கருவி எனலாம்.

வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள்.

இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.

பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம்.

 பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும்.
"ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.

தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.

பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோத்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு.

மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.

Thursday, November 6, 2014

அனைத்திலும் பிரம்மத்தை கண்ட சுகப்பிரம்ம மகரிஷி!

அனைத்திலும் பிரம்மத்தை கண்ட சுகப்பிரம்ம மகரிஷி!
சுகம் என்றால் கிளி. தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார் வியாசர். குழந்தையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். உடனே குழந்தை சிறுவனாக மாறினான். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவேண்டுமா? வியாசரின் பிள்ளைக்கும் அவரைப் போலவே எல்லா ஞானமும் ஆற்றலும் அறிவும் இயல்பாக இருந்தன. எதையும் குருமுகமாக அறிய வேண்டும் என்ற நியதிப்படி வேதவியாசருடைய தவப்புதல்வர், பிரகஸ்பதியின் சீடனானார்.ஞானக்குழந்தையாக அனைத்தையும் அறிந்த தெளிவுடன் தேஜஸுடன் வளர்ந்து வந்த சுகருக்கு உரிய வயது வந்ததும் பரமேஸ்வரர் உமையுடன் வந்து உபநயனம் செய்வித்தனர். பால பிரம்மச்சாரிக்கு வேண்டிய தண்டமும் மான் தோலும் வான் வெளியிலிருந்து அவரருகே வந்து விழுந்தன. சுகஹா என்னும் வடமொழி சொல்லுக்கு கிளி என்று பொருள். எவரும் கற்றுத்தரவில்லை என்றாலும் இயல்பாகவே வேத வேதாங்கங்களைச் சுகப்பிரம்மரிஷி அறிந்திருந்தார்.
சுகபிரம்மத்தின் பெருமையை நமக்கு தெரியச் செய்த பெருமை பரீட்சித்து மகாராஜாவையே சாரும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் பேரன் இவர். பரீட்சித்துவின் தந்தை அபிமன்யு. இந்த மன்னன் பிறவியிலேயே விஷ்ணுவின் அருள்பெற்றவன். பாண்டவர்களின் வம்சத்தை அழிக்கும் எண்ணத்தில் இருந்த கவுரவர்கள், அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த பரீட்சித்து மீது பிரம்மாஸ்திரத்தை ஏவியபோது, விஷ்ணு தன் சக்கரத்தால் அதை தடுத்து நிறுத்தினார்.
பிறக்கும் முன்பே விஷ்ணுவால் காப்பாற்றப்பட்ட பரீட்சித்து, ஒரு சமயம் காட்டில் வேட்டைக்குச் சென்ற இடத்தில் தாகம் உண்டானது. தண்ணீர் தேடிச் சென்ற போது, வழியில் சமீகர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். வாசலில் நின்று தண்ணீர் கேட்டார். ஆனால், காதில் வாங்கிக் கொள்ளாமல் நிஷ்டையில் இருந்தார் சமீகர்.கோபம் கொண்ட மன்னன் பரீட்சித்து, காட்டில் கிடந்த செத்த பாம்பினை குச்சியால் எடுத்து மாலைபோல் அவருடைய கழுத்தில் போட்டார். பரீட்சித்தின் பாதகச் செயலை, அங்கு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சமீகரின் பிள்ளை சிருங்கி பார்த்து விட்டான். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ஏ! மன்னனே! நிஷ்டையில் இருந்த என் தந்தையை அவமதித்த நீ இன்னும் ஏழுநாளில் பாம்பால் அழிவாய், என்று சபித்துவிட்டான்.
உடனடியாக பரீட்சித்து தன் மகன் ஜன்மேஜயனுக்குப் பட்டம் கட்டி நாட்டுக்கு மன்னனாக்கினான். கங்கைக்கரையில் தவம் செய்து தன் உயிரைவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். விருப்பப்படியே கங்கையின் மத்தியில் அழகிய மண்டபத்தை அமைத்து அதில் தங்கினான். தகவல் அறிந்த அத்ரி, வசிஷ்டர், பிருகு, ஆங்கிரசர், பராசரர், தேவலர், பரத்வாஜர், கவுதமர், அகத்தியர், வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினான். இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவபூஜை செய்தபடியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 16. சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.
உயிர்பிரிய ஒரு வாரமே இருக்கும் சந்தர்ப்பத்தில், சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினான். ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில்,அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது, கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகபிரம்மர், அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார். அதுவே பாகவதம் என்னும் நூல் ஆயிற்று. எனவே பாகவதம் தந்தவர் சுகப்பிரம்ம மகரிஷியே!
சுகப்பிரம்மரின் பெருமையை உணர்த்தும் வகையில் பல சுவையான சம்பவங்கள் கூறப்படுகிறது. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.
வேகமாக ஒலித்த அன்னதான மணி !
பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜசூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது. அதில் ஒருலட்சம் பேர் சாப்பிட்டால் அதை தெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும். அதைக் கொண்டு ஒருநாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள். திடீரென்று ஒருநாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தரம் அடித்தால் ஒருலட்சம் தானே கணக்கு!இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு, குறித்துக் கொள்ள முடியாதபடி தொடர்ந்து மணி அடித்துக் கொண்டிருந்தது. என்ன அதிசயம்! வேகம் தாளாமல் மணி அறுந்து விழுந்துவிட்டது. தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை. அனைவரும் திகைத்து நின்ற வேளையில், எச்சில் இலைகளைப் போட்ட இடத்தில் பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் ஒரு சில பருக்கைகளைக் கொத்திவிட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது. சுகப்பிரம்மருக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டாலும், அவரது பெயரால் அன்னதானம் நடத்தினாலும் நமக்கு அளவற்ற செல்வமும், புண்ணியமும் கிடைக்கும்.
நீராடும் பெண்கள் சுகப்பிரம்மரை கண்டதும் செய்தது என்ன?
மகாபாரதத்தை உலகிற்கு அளித்த வியாசரின் புதல்வர் சுகமுனிவர். கிளி முகம் கொண்ட இவருக்கு நாரதர் உபதேசம் செய்தார். தவவாழ்வில் ஈடுபட்ட இவர், எல்லா உயிர்களிலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்ந்தார். ஒரு நதிக்கரை வழியே தந்தையுடன் சுகப்பிரம்மர் சென்றபோது, நீராடும் தெய்வப்பெண்களைக் கண்டார். அவர்கள், வயோதிகரான வியாசரைக் கண்டதும் நாணத்தால் எழுந்து ஆடையால் உடலை மறைத்தனர். ஆனால், வாலிபரான சுகரைக் கண்டு வெட்கப்படவில்லை. உங்களின் இந்த மாறுபாடான செயலுக்கு என்ன காரணம்? என வியாசர் கேட்க, எல்லாவற்றையும் சுகப்பிரம்மர் தெய்வீகமாக காண்பது தான், என விடையளித்தனர். இவர் இயற்றிய பாகவதத்தை சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன்மழை என்று பாராட்டுவர்.
சுகப்பிரம்மரை கூப்பிட்டால் மரம் செடி கொடிகள் கூட பதிலளிக்கும் அதிசயம்!
மகாபாரதம் தந்த வியாசரின் புத்திரர் சுகபிரம்மர் பிறந்ததில் இருந்து தந்தையை விட்டுப் பிரிந்ததில்லை. ஒருநாள், திடீரென காட்டுக்குள் ஓட ஆரம்பித்தார். பின்னால் ஓடிய வியாசர் “மகனே! மகனே’ என கூவி அழைத்தார். உடனே அங்கிருந்த மரங்களெல்லாம் “என்ன என்ன’ என்று கேட்டதாம். அதாவது சுகபிரம்மர் வேறு, தாங்கள் வேறு அல்ல என்று காட்டிக் கொண்டன. மரங்கள் மட்டுமல்ல, அங்கிருந்த பறவைகள், விலங்குகள், மலைகள், நதிகளும் “என்ன என்ன’ என்றதாம். சுகப்பிரம்மரும் தாங்களும் ஒன்றே என்ற மனநிலையை கொண் டிருந்தன.
அதனால், அவரது பிரதிநிதியாக அவை பதிலளித்தன. இந்த உலகிலுள்ள “எல்லாமே அவர்’ என்ற வகையில் அவர் மேம்பட்ட நிலையில் இருந்தார். “சர்வபூத ஹ்ருதயர்’ என்று அவரை அழைத்தனர்.
இறவா வரம் பெற்ற சிரஞ்சீவி மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது பிரதான சீடர் ஆதி சங்கரர். இதிலிருந்து சுகப்பிரம்மரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
சுகப்பிரம்ம காயத்ரி :
ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பில்லாலி தொட்டியில் சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடம் உள்ளது. இங்கு சுகப்பிரம்மருக்கு தனி சன்னதி உண்டு.
வியாசர் மகாபாரதத்தை சுகருக்கு உபதேசித்த பிறகே தம் சிஷ்யர்களான வைசம்பாயனர் போன்றோருக்கு உபதேசித்தார். பஞ்சபூதங்களைப் போன்ற மன உறுதி படைத்த சுகரின் புகழ் என்றும் நிலைத்ததாகும்.
==============================================================
ஸ்பெஷல் தகவல் :

சென்னையில் சுகப்ரம்ம மகரிஷி ஆஸ்ரமம்!
சுகப்பிரம்ம மகரிஷியை போற்றி, அவரை ஆராதிப்பதற்கென்றே சென்னை தி.நகரில் சுகப்ரம்ம மகரிஷி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. குமார குருஜி என்பவர் இதை நிர்வகித்து வருகிறார். சுகப்ரம்ம – மார்கண்டேய ஜீவ நாடி ஜோதிடம் இங்கு மிகவும் பிரபலம். மற்ற நாடி ஜோதிடம் போலல்லாமல் இவர்கள் பார்க்கும் முறையே வேறு. ஆனால் தற்போது நாடி ஜோதிடம் பார்ப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.
sukar2இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சுகப்ரம்ம மகரிஷியின் ஜெயந்தி வரும் தினத்தன்று (ஆனி மாதம் – திருவோணம் நட்சத்திரம்) மூன்று நாட்கள் இங்கு கொண்டாட்டம் களைகட்டும். வேத விற்பன்னர்கள் அது சமயம் கௌரவிக்கப்படுவார்கள். ஹோமங்கள் யாகங்கள் நடைபெறும். அன்னதானமும் உண்டு.
- See more at: http://rightmantra.com/?p=12200#sthash.7ulUwfgI.dpuf

Wednesday, November 5, 2014

தோணிபுரீஸ்வரர் ஆலயம்

image.jpeg


தோணிபுரீஸ்வரர் ஆலயம் 
தென்பாண்டி நாட்டின் தெற்குப்பகுதியிலிருக்கும் திருநெல்வேலி பதியின் அருமை பெருமையினை அளவிட முடியாது. “திக்கெல் லாம் புகழுறும் திருநெல்வேலிச் சீமை’ என்பது திருஞானசம்பந்த சுவாமிகளின் திருவாக்கு.
அத்தகைய திருநெல்வேலிச் சீமையின் வடக்கே அமைந்த அழகிய நதி, நிட்சேப நதியாகும்.
“அந்த நதிதன்னில் மன  விருப்போடு சித்திரை விசுவாம் அத்தினத்தில் வந்து படிந்தவர் சாயுச்சியம் பெறுவார் ஐயமில்லை- வழுத்தற் கொண்ணா நிந்தையுறும் பாதகர் காணினும் புனிதராவர் எனில் நிகழ்த்தும் அந்தச்சுந்தர நிட்சேப நதிப்புனல் படிந்தோர் பெறும்பேறு சொல்லுவ தென்னே’
என்றவாறு, நிட்சேப நதியின் பெருமையை, சங்கப்புலவர் மரபில் உதித்த  ச. திருமலைவேற் கவிராயர் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
அத்தகைய நதியின் தென்பகுதியில் கலிங்கப் பட்டி மரத்தோணி ஸ்ரீ அகிலாண்டஸ்வரி சமேத தோணிபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள் ளது.
மரத்தோணி
முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னன் போரில் வெற்றிபெற்று தனது படைகளுடன் திரும்பும்பொழுது, ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதைக்கண்ட மன்னன், தனது நாட்டிற்கு “அனைவருடனும் அகமகிழத் திரும்பவேண்டும்’ என்று ஈசனிடம் முறையிட, ஆற்றங்கரையில் நின்ற வானுயர்ந்த மரம் வேருடன் சாய்ந்து, அக்கரைக்குச் செல்ல தோணிபோல் உதவியதால், இவ்வூருக்கு மரத்தோணி என்று பெயர் வந்தது என்று கூறுகிறார்கள்.
மற்றுமொரு காரணம்
சென்ற நூற்றாண்டில் தமிழ் இலக்கியங்களில் தனித்து விளங்கிய இ.மு. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் “நெல்லை மாவட்ட கோவில் வரலாறு’ என்னும் நூலில், “ஸ்ரீராமபிரானும் சீதையும் லட்சுமணனும் இப்பகுதிக்கு வரும்போது, நிட்சேப நதி வெள்ளம் கரைபுரண்டு வர, ஆற்றைக் கடக்க தென்பகுதியிலுள்ள வேப்பமரம் தோணிபோல் வளைந்துகொடுத்த காரணத்தால் மரத்தோணி என்று பெயர் வந்தது’ என்று பதிவுசெய்துள்ளார். எப்படியிருப்பினும், ஆன்மாக்களை பிறவியெனும் பெருங்கடலிலிருந்து கரையேற்றுவது ஈசனின் கடன். இத்தத்துவத்தை உணர்த்த மரத்தோணி கிராமத்தில் சிவபெருமான் கோவில்கொண்டு திருவருள் செய்கிறார் என்பது பொருத்தமான செயல்தானே.
திருவொற்றியூரானும் திருத்தோணிபுரத்தானும்
தேவார மூவராலும் பாடல்பெற்ற திருத்தலம்- திருஞானசம்பந்த சுவாமிகள் அவதாரம் செய்த அற்புதத் தலம்- பிரம்மாவுடன் தேவர்களும், நவகோள்களும் வந்து வழிபாடு செய்த திருத்தலம் சோழநாட்டு வடகரைத் தலங்களில் ஒன்றான சீர்காழி. இதற்கு பன்னிரண்டு பெயர்கள் உண்டென்று சேக்கிழார் சுவாமிகள் அருளிச்செய்துள்ளார்.
பிரளய காலத்தில் சிவபெருமான், உமை அன்னையோடு சுத்தமாயையைத் தோணியாகக் கொண்டுவந்து, உயிர்கள் உய்யும் வண்ணம் சீர்காழித் தலத்தில் எழுந்தருளினார். எனவே, இத்தலத்திற்கு தோணிபுரம் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு தோணியப்பர் என்பது சிறப் புத் திருநாமம் ஆகும்.
சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்ட சிறப்புடைய தலம்- திருவிளக்குப் பணியின்பொருட்டு தமது கழுத்தினையே அரிய முற்பட்ட கலியநாயனார் அவதாரத் தலம் சென் னைக்கு அருகிலுள்ள திரு வொற்றியூர். மாந்தாதா என்னும் மன்னன் தனது ஆயுளைக் குறைக்கும் பொருட்டு, நாட்டிலுள்ள சிவாலய பூஜை நிகழ்வுகளைக் குறைக்கும் குறிக்கோளுடன் அரசாணை வெளியிட்டான். அதில் அந்த மன்னன் அறியாவண்ணம், “திருவொற்றியூர் நீங்கலாக’ என்று இடைச்செருகலிட்ட எழுத்தறிநாதர் அருள்பாலிக்கும்அற்புத தலம். இங்கு தியாகராஜர் சந்நிதி சிறப்புடையது. வடிவுடைய அன்னை எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில் மகிழமரம் தலவிருட்சமாகும். பட்டினத்தார் ஆலயத்தினை தன்னகத்தே கொண்ட திருவொற்றியூரில், மூவர் முதலிகளின் தேவாரம் தேனாமிர்தமாகும். ஆளுடைய அரசராகிய ஸ்ரீ அப்பர் சுவாமிகள் நாம் உய்யும் பொருட்டு திருவொற்றியூர் கோமானிடம்,
“மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும்போது 
மதமெனும் பாறை தாக்கி மறியும்போது அறிய வொண்ணா(து)
உனைஉனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே’

என்று பாடித் துதிசெய்கிறார்.
“மனமாகிய தோணியில் அறிவு எனப்படும் கோலை நாட்டி, சினம் எனப்படும் சரக்கை ஏற்றி உறவுகளுடன் செல்லும்போது, மதம் எனப்படும் தீவினை தாக்கி நிலைகுலைந்து இறுதிக்காலத்திற்கு செல்லுவது உறுதி. இதனையெல்லாம் அறியாத நான் என் உணர்விலே, உன்னை எப்போதும் உறுதியுடன் நினைத்து வாழ அருள் செய்வாய் திருஒற்றியூர் பெருமானே’ என்கிறார்.
மேற்கண்ட உயர்ந்த தத்துவங்களைக் கொண்டவர்தான் மரத்தோணி கிராமத்திலும் எழுந்தருளி திருவருள் நல்கும் தோணிபுரீஸ்வரர் பெருமான் ஆவார்.
இறைவன்
“துறையாருங் கடல் தோணிபுரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே’ என்பது ஆளுடைய பிள்ளையாரின் அருள்வாக்கு. மேலும், தோணிபுரீஸ்வரரின் பெருமையை தேவார மூவர் முதலிகளும் ஏனைய அருளாளர்களும் போற்றி மகிழ்கிறார்கள். தோணிபுரீஸ்வரர், தோணியப்பர் என்றழைக்கப்பெறும் சிவபெருமானின் லிங்கத் திருமேனி, இப்பகுதியில் பிரம்மாண்டமான திருமேனியாகும். தோணிபுரீஸ்வரரை தரிசனம் செய்யும்போது “தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தருவான் தத்துவன்’ என்னும் திருமொழி இங்கு மெய்யாகிறது. நம்முடைய வினைகள் யாவும் வீழ்த்தப்பெற்று நல்வழிதனை நலமுடன் காட்டியருளுகிறார் என்பதனை தரிசிப்போர்வழி உணரலாம்.
பிழைபொறுக்கும் பித்தனின் துணையாள் தமிழக பஞ்சபூதத் “தலங்களில் அப்புத்தல மாகத் திகழ்வதும்; “திருநீற்றான் மதில்’ என்னும் புராணச் சிறப்புகொண்ட மதில்சுவர் அமையப் பெற்றதும்; தேவார மூவராலும், ஐயடிகள் காடவர்கோனும், சைவஎல்லப்ப நாவலரும், கச்சியப்ப முனிவரும், அருணகிரிநாதர் மற்றும் காளமேகப் புலவர் போன்றோரால் பாடல்பெற்றதுமான திருவானைக்கா தலத்தில் திருவருள்பாலிக்கும் அன்னையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதே.
திருவாவடுதுறை ஆதீனப்புகழ் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு “அகிலாண்டநாயகி மாலை’ என்ற புகழாரம் ஒன்றைச் சூட்டியுள்ளார். அதில் மீனாட்சி சுந்தரம்பிள்ளை வினோதமான வேண்டுகோளை வைக்கிறார்.
“அகிலாண்ட நாயகி அன்னையே, உன் கணவனுக்கு யாரை எங்கு வைப்பதென்றே தெரியவில்லை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பித்தன் என்று உன் கணவனைப் பாடியது சரிதான்.
ஏனென்றால், நீ எத்தகைய குணம் உடையவள்! கங்காதேவி எத்தகைய குணம் உடையவள்? நீரில் யாரேனும் தவறி மூழ்கினால் மூன்று முறைமட்டுமே நீராகிய கங்காதேவி அப்பிழையைப் பொறுப்பாள். நீரும் முப்பிழை பொறுக்கும் என்பது பழமொழி. ஆனால் நல்வயல்கள் சூழ்ந்த திருவானைக்காவில் எழுந்தருளி நல்கும் நீயோ, உயிர்கள் செய்யும் பல்வேறு குற்றங் களைப் பொறுத்து அருள் செய்கின்றாயே. உனக்கு தனது உடம்பில் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு, மூன்றுமுறை மட்டுமே பிழைபொறுக்கும் கங்காதேவியை தலையில் சூடிக்கொண்டாரே’ என்று துதி செய்கிறார்.

“அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை
யணியுருப் பாதியில் வைத்துத்
தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
சடைமுடி வைத்தனன் அதனால்
பிளவியன் மதியஞ்சூடிய பெருமான்
பித்தென்றொரு பெயர் பெற்றான்
களமர்மொய் கழனி சூழ்திரு வானைக் 
காவலகி லாண்டநாயகியே.’

அதுபோல மரத்தோணியில் உயிர்கள் செய்யும் எல்லா குற்றங்களையும் பொறுத்துக் காத்தருளும் அன்னை, அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடனே திருவருள் பாலிக்கிறாள்.
அன்னை அகிலாண்டேஸ்வரி இரண்டு திருக்கரங்களுடன் குருபீட அம்சமாக தெற்குநோக்கி எப்போதும் மங்களம் நல்கும் திருக்காட்சி தருகிறாள்.
விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர் ஆகியோருடன் அருள் வழங்கும் மரத்தோணி திருக்கோவிலின் மூலக்கோவில் சிதைவுற்றபிறகு, இப்பகுதியில் குலசேகரப்பேரி என்னும் கிராமத்தில் வாழ்ந்த எ. லிங்கவநாயக்கர் என்னும் பெரியவர் புனர்நிர்மாணம் செய்து, 26-5-1969 அன்று குடமுழுக்கு வைபவத்தை நடத்தியுள்ளார்.
கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீ திருமுருகன் திருப்புகழ் சபை சார்பாக தொடர்ந்து பிரதோஷ வழிபாடு நடத்தப்பெற்று வருகிறது. “பிரதோஷ தரிசனத்திற்கு வரும் அன்பர்களின் வாழ்வில் மங்களங்களை நிறையச் செய்துள்ளார் ஸ்ரீதோணிபுரீஸ்வரர்’ என்று பெருமை பொங்கப் பேசி மகிழ்கிறார்கள் ஸ்ரீதிருமுருகன் திருப்புகழ் சபைக்குழுவினர்.
ஆலயத்துக்கு முன்மண்டபம் அமைத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்பது இவ்வூர் மக்களின் எதிர்பார்ப்பு. திருப்பணியில் பக்தர்கள் பங்குபெறலாம். தோணியப்பர் அதை நிறைவேற்றி வைப்பார்.
மரத்தோணி தோணிபுரீஸ்வரர் ஆலயத் திற்கு கலிங்கப்பட்டி, திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், சுப்புலாபுரம் வழியாக வந்தடையலாம். ஆட்டோ, மினிபஸ் வசதிகளும் உள்ளன.
ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் கரிவலம் வந்தநல்லூர் திருமுருகன் திருப்புகழ் சபை சார்பாக, மாலை 3.00 மணியளவில் வேன் மற்றும் ஆட்டோக்கள் மூலம் அன்பர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

பிரதோஷ தரிசனத் தொடர்புக்கு:

செ. சுப்பையா- 04636 260500,
பெ. சண்முகம், 99947 92058,
வே. கார்த்திகேயன்- 99434 96038.



——————————————————————————————

அற்புதத் தலம் தில்லையாடி:

அற்புதத் தலம் தில்லையாடி:image.jpeg
          ங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பவன் இறைவன். அவனது நிறைவினை ஆன்மாக்களாகிய நாம் எளிதில் உணர முடிவதில்லை. அதனால் இறைவன் தனது கருணைப் பெருக்கால் தானே பல இடங்களில் மிக்குத் தோன்றி விளங்குகின்றான். அவ்வாறு அவன் தோன்றி விளங்கும் இடங்களே “தலங்கள்’ எனப் பெற்றன.
அருள்சக்தி தேங்கியிருக்கும் இடத்தை முதலில் கண்டவர்கள் சித்தர்கள், முனிவர்கள் ஆவர். பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவரும் தில்லைவனத்தில் நிகழும் ஆனந்த தாண்டவத்தை தரிசித்து உலக மக்கள் அனைவருக்கும் அக்கூத்து பயன்படும்படி செய்தார்கள். தலங்களால் முனிவர்கட்கும், முனிவர்களால் தலங்களுக் கும் விளக்கம் உண்டாகியது. சிறந்த தலங்களி லெல்லாம் இன்றும் சித்தர்கள் தவம்செய்து கொண்டிருப்பதாக சமய நூல்கள் கூறுகின்றன.
அந்த வரிசையில் இளங்கார முனிவர் தவமிருந்து மெய்ஞ்ஞானம் பெற்ற பெருமை வாய்ந்ததும், காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், திருமால், சனி, இந்திரன் முதலானோர் வழிபட்டு பேறு பெற்றதும், சோழ மன்னர்கள் மட்டுமல்லாமல் பாண்டிய மன்னர், பிற மன்னர்களும் கி.பி. 7, 8-ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்ததுமான அற்புதத் தலம்தான் தில்லையாடி.
இறைவன்: சார்ந்தாரைக் காத்தநாதர், சரணாகத ரட்சகர்.
இறைவி: பெரியநாயகி அம்பாள்.
தல விருட்சம்: வில்வமரம், வன்னிமரம்.
தீர்த்தம்: சக்கரதீர்த்தம்.
திருமால் வழிபட்டது முராரியான திருமால் முன்னொரு காலத்தில் இரண்யாசுரன் என்றஅசுரனைக் கொன்றார். அதனால் அவருக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசனிடம் சக்ராயுதத்தைப் பெற்று, திருக்கடவூர் அருகிலுள்ள தில்லைவனமான தில்லையாடியைச் சார்ந்தார். தன் சக்ராயுதத்தால் இங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, புனல், மலராதி கொண்டு சார்ந்தாரைக் காத்தநாதரை யாளி (குதிரை) வடிவில் அர்ச்சித்து வழிபடலானார். சிவபெருமான் அவர்முன் தோன்றி அவருக்குண்டான வீரஹத்தி தோஷத்தை நீக்கியருளினார். திருமால் உருவாக்கிய தீர்த்தம் சக்கரதீர்த்தம் என்றாயிற்று. தில்லைவனம் என்பது தில்லையாளி என்றானது.
தேவேந்திரன் தில்லைவனநாதரை வணங்கி, “தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடியதுபோல் இந்த தலத்திலும் திருநடனம் புரிய வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டதன் பேரில், இந்திரனுக்காக ஆனந்த நடனம் ஆடியருளியதால் தில்லையாடி என பெயர் பெற்றது. தில்லைவனம், வள்ளியம்மை நகர், தில்லையாளி என்ற பெயர்கள் இருந்தாலும் தற்போது நடைமுறையில் தில்லையாடி என்றே விளங்கப் பெறுகிறது.

சனி பகவான் பூஜித்தது

நவநாயகர்களில் நீதி தவறாத நீதிபதியாக தன் கடமையைச் செய்பவர் சனி பகவான். தன் கடமையைச் செய்கின்ற சனி பகவானுக்கு அபவாதப் பெயர் தான் வருகிறது. இந்த அபவாதப் பெயர் நீங்கவும், தன்னை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பிய சனி பகவான், தில்லையாடிக்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி எண்ணற்ற நாட்கள் தவங்கிடந்தார். எம்பெருமானும் சனி பகவானின் அன்பிற்கு எளியராகி, “தன்னை சரணடைந்த அடியார்கட்கு வேண்டுவனவெல்லாம் நல்கும் திறனை’ சனி பகவானுக்கு அருளினார்.

இளங்கார முனிவர் வழிபட்டது

சோழமன்னன் ஆட்சிக்காலத்தில், இளங்காரர் என்பவர் நம்பிக்கைக்குரிய அமைச்சராக பணி யாற்றி வந்தார். சோழமன்னன் திருக்கடையூர் சிவாலயத்தை புதுப்பிக்க எண்ணி, தன் அமைச்சரை திருக்கடையூரிலே இருக்கச் செய்து, பெரும் பொருள் அனுப்பி திருப்பணிகள் பலவும் செய்ய ஆக்ஞாபித்தான். காலை முதல் மாலை வரை திருப்பணிகள் செய்வதைப் பார்வையிட்டு, இரவு தில்லைவனத்திலே தங்கிவிடுவது அமைச்சரின் வழக்கம். அச்சமயம் அவருக்கு இனம் புரியாத உடல்வலி இருந்துகொண்டே இருந்தது. இந்த வலி நிரந்தரமாகி விடுமோ என்ற அச்ச உணர்வுடன் அவரது பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தார். மருத்துவம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஒருநாள் பணிக்குப் புறப் பட்டபோது மிகுந்த அசதி உண்டாயிற்று. அப்போது, வில்வ மரங்களுக்கிடையே ஒரு லிங்கம் இருப்பதைக் கண்டு, அவரை வழிபட்டு சக்கர தீர்த்தத்தில் நீராடினார். 
அதன்பின்னர் பழையன கழிந்து உடலில் புதிய ரத்தம் செலுத்தியதுபோல் புத்துணர்வு பெற்றார். ஈசனை வணங்கிவிட்டு அவரது பணிக்குச் சென்றார்.
உடல்வலியோடு தவித்த தன்னை உடல் வலிமையோடு உலாவரச் செய்த ஈசனுக்கு கோவில் எழுப்பினால் என்ன என்று சிந்தித்தார் அமைச்சர். மன்னன் தான் எவ்வளவு பணம், பொருள் கேட்டாலும் கொடுக்கிறாரே, அரசனுக்குத் தெரியாமல் இங்கு கோவில் கட்ட பயன்படுத்துவோம் என்று முடிவுசெய்து, திருக்கடையூரிலிருந்து தில்லையாடிக்கு சுரங்கப்பாதை அமைத்து, தில்லையாடி ஈசனுக்கு கோவில் கட்டினார். 
திருக்கடையூரிலும் தில்லையாடியிலும் ஒரே சமயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்றன. ஒரே நாள் ஒரே நேரத்தில் இரு கோவில்களிலும் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கு இரு தினங்களுக்குமுன் அரசரின் கனவில் ஈசன் தோன்றி, “எனது பக்தன் வில்வ வனமான தில்லை வனத்திலே ஆலயம் எழுப்பியுள்ளான். கும்பாபிஷேக நேரத்தில் அங்கும், தீபாராதனை காட்டும் நேரத்தில் திருக்கடையூரிலும் காட்சி தருவேன்’ என்றார். உறக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்த மன்னர் பொழுது விடிந்ததும் தில்லைவனத்திற்குச் சென்றான்.
அங்குள்ள மக்கள் அமைச்சர் இளங் காரரைக் காட்டி, “இவர்தான் கோவில் கட்டினார்’ என்று மன்னனிடம் கூறினர். “இவர் உண்ணும் உணவே எனது பணமாயிற்றே. இவர் எப்படி கோவில் கட்டினார்’ என்று யோசித்த மன்னனுக்கு அப்பொழுதுதான் தெரியவந்தது- ஒரு கோவில் திருப்பணி செலவில் கணக்குகள் காண்பித்து இரு கோவில்களைக் கட்டியுள்ளார் என்று. ஒருபுறம் கோபம், மறுபுறம் வெகுநேர்த்தியாக அனைத்து அம்சங்களும் அழகுற வடிவமைத்த சந்தோஷம். பிறகு மன்னன், “”எனது மூலதனத்தை வைத்து எனக்குத் தெரியாமல் கோவில் கட்டினீர். பரவாயில்லை; அந்தப் புண்ணியத்தை எனக்கு தந்துவிடும்” என்றான்.
“”மன்னா, பணம் தங்களுடையதாய் இருக்கலாம். ஆனால் புண்ணியம் எனக்குத்தான்” என்றார்.
மன்னனுக்கு மேலும் கோபம் வந்தது. ஏவலர்களைப் பார்த்து, “”என் கருத்துணராது செயல்பட்ட அமைச்சரின் கை, கால்களைச் சேதம் செய்க” என்று ஆணையிட்டான். ஏவலர்களும்அவ்வண்ணமே செய்தனர். அப்போது சிவபெருமான் அசரீரியாக, “”அமைச்சர் சிவப்பணி செய்து சிவாலயம் எடுப்பித்தார். அவர் செய்த பணியை நாம் ஏற்றோம்” என்றார். ஏவலர்கள் அமைச்சரின் கை, கால்களை சேதம் செய்தபோது மன்னனின் கண்பார்வை பறிபோனது. “”ஈசனே! எம்பெருமானே! இது என்ன சோதனை? இன்னும் 48 மணி நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமே” என்று புலம்பினான். அதற்கு அமைச்சர், “”நிருதிமூலையில் விநாயகரை நிறுவி வழிபடு; சரியாகிவிடும்” என்றார். அமைச்சர் கூறியதன் பேரில் நிருதி விநாயகரை சிறப்பு பூசனை செய்து மனதார வழிபட்டு மீண்டும் கண்பார்வை பெற்றான். 
பார்வை வந்ததும் இளங்காரருக்கு அம்மையப்பன் காட்சி தந்தார். 
இதைக் கண்டவுடன் தன் குற்றத்தினை உணர்ந்து அமைச்சரிடம் அடிபணிந்தான் மன்னன். அமைச்சரின் வெட்டுண்ட கை, கால்கள் எம்பெருமான் அருளால் மீண்டும் ஒன்றுசேர்ந்தன. இதைக் கண்ணுற்ற அரசன் மனம் மகிழ்ந்தான். 
அதன்பின் அமைச்சரை இத்தலத் திலேயே இருக்கச் செய்து வேண்டுவனவெல்லாம் நல்கி, அரசன் தன் இருப்பிடம் சேர்ந்தான். இளங்கார முனிவர் என்ற திருப்பெயருடன் அவ்வமைச்சர் இத்தலத் திலேயே இருந்துவரலானார். மணிவாசகர் அருள் பெற்றுய்ந்தது போல் இளங்கார முனிவரும் சிவனருள் நிரம்பப் பெற்றார்.
அவர் ஒருசமயம் சிதம்பரம் பொற்சபை யில் ஸ்ரீநடராஜர் திருநடனம் செய்வதை இத்தலத்தில் காணவேண்டும் என்று விரும்பினார். சிற்சபாநாதனும் “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ என்ற திருவாக்கின்படி, இளங்கார முனிவரின் விருப்பின் வண்ணம் தில்லைவனத்தில் ஸ்ரீநடராஜர் நடனமாடினார். இளங்கார முனிவரும் அந்த நடனத்தைக் கண்டு பேரின்ப வெள்ளத்தில் ஆழ்ந்தார். நாள்தோறும் அந்த ஞான நடனத்தைக் கண்டுவரலானார். இவ்வண்ணமே இருந்து இளங்கார முனிவர் குஞ்சிதசரணத்தில் இரண்டறக் கலந்தார் என்று தலபுராணம் கூறுகிறது.
இவ்வரலாற்றினால் இத்தல இறைவனுக்கு ஸ்ரீசார்ந்தாரைக் காத்த சுவாமி என்ற திருநாமம் வழங்கலாயிற்று. 1915-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் தில்லையாடிக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு

கோவிலின் முன்பு சக்கர தீர்த்தம் உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளோடு அறுபதடி உயரத்தில் வானளாவி விளங்கு கின்றது. அதன் கீழ் இளங்கார முனிவர் ஈசனைவணங்குவதுபோன்ற சிற்பம் காணப்படு கின்றது. அடுத்து இடதுபுறம், கருவறையில் மூலவரான ஸ்ரீசார்ந்தாரைக் காத்த சுவாமி காட்சி அளிக்கிறார். மூலவருக்கு வலப்புறம் சுரங்கப்பாதை உள்ளது. நிருதிமூலையில் சோழ மன்னனுக்கு கண்ணொளி தந்த நேத்ர விநாயகர் கஜப் பிருஷ்ட விமானத்தின்கீழ் சோழ விநாயகர் என்ற திருநாமத்துடன்அருள்புரிகிறார். பொதுவாக சுவாமி சந்நிதி தான் கஜப்பிருஷ்ட விமானத்துடன் அமைந்திருக்கும். இங்கோ சுவாமி இந்திர விமானத்துடனும், சோழ விநாயகர் கஜப்பிருஷ்ட (யானையின் பின்பகுதி போல் அமைப்பு) விமானத்துடன் இருப்பது தனிச்சிறப்பு. சுப்ரமணியர் ஆலயம் தனியாக உள்ளது. சனிபகவான் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. அதற்கு பின்புறம் சூரியனும், பைரவரும் மேற்கு நோக்கி அருள்புரிகிறார் கள். திருநள்ளாறில் உள்ளது போல் சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் மத்தியில் தனிச்சந்நிதியுடன் சனி அருள் புரிகிறார். இதன் இடதுபுறம் வில்வமரம், வலது புறம் வன்னிமரம் உள்ளது. கொடிமரத்தில் திருமால் யாளி வடிவில் ஈசனை வணங்குவதுபோல் பொறிக்கப்பட்டுள்ளது.
தெற்கு நோக்கிய அம்பிகை ஸ்ரீபெரியநாயகி ஆனந்தமாய், அறிவாய், அமுதாய் இன்பம் தரும் நிலையில் அருள்புரிகிறாள். ஆடிப்பூர நாளில் வளையல் அணிவிப்பு நிகழ்ச்சியில் மணப்பேறு, மக்கட்பேறு கிடைக்க அருள்புரிவாள். அம்பாளுக்கு தனிச்சுற்றுடன் கூடிய தனிச்சந்நிதி உள்ளது. வெளி மகா மண்டபத்தில் கோஷ்டத்தில் ஆஞ்சனேயர் அருள்புரிகிறார்.
“நிறைந்த ஆயுளுடன் வாழ திருக்கடையூர்; பூரண ஆரோக்யத்துடன் வாழ தில்லையாடி; அண்ணன் எமதர்மனுக்கு காட்சி தந்தது திருக்கடையூரில்; தம்பி சனி பகவானுக்கு காட்சி தந்தது தில்லையாடியில்’ என்று இறையன்புடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகர். சரணா கதரட்சகராம் ஸ்ரீசார்ந்தாரைக் காத்த நாதர் உடனுறை ஸ்ரீ பெரியநாயகி அம்பாள், அனுக்கிரக சனீஸ்வரரை ஒருசேர தரிசிப்போம். ஒளிமயமாய் வாழ்வோம். ஓம் நமச்சிவாய!
ஆலய தொடர்புக்கு: கல்யாண சுந்தர சிவாச்சாரியார் செல்: 96007 68379.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திலுள்ள திருக்கடையூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில், திருவிடைக் கழி செல்லும் வழியில் உள்ளது தில்லையாடி.