Wednesday, November 5, 2014

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (1)

“எல்லாமே விதிப்படி தான் நடக்குது… நம்ம ஜாதகத்துல கட்டம் என்ன சொல்லுதோ அதுப்படி தான் எல்லாம் அமையுதுங்குறப்போ என்ன கோவிலுக்கு போய் என்ன சார் பலன்? என்ன பரிகாரம் செஞ்சி என்ன மாறிடப்போது? என் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும் சார்” – இது போன்ற புலம்பல்களை நாம் நம்மை சுற்றிலும் அதிகம் கேட்பதுண்டு. ஏன் நாமே கூட சில சமயம் விரக்தியில் அப்படி புலம்புவதுண்டு. என்றாலும் அதில் உள்ள கேள்வி யதார்த்தம் தானே?
முன் ஜென்ம வினை அல்லது கர்மா தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்றால் கோவில்கள் எதற்கு, அதில் தெய்வங்கள் எதற்கு அல்லது பரிகாரங்கள் தான் எதற்கு? அபிஷேக ஆராதனைகள் எதற்கு ? அங்கப் பிரதக்ஷிணம் எதற்கு? சும்மா வீட்டில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கலாமே ? பணம் & நேரம் இதுவாவது மிச்சமாகுமே…?
பலரை வாட்டி வரும் கேள்வி இது.
“எல்லாமே தலையில் எழுதியபடி தான் நடக்கும் எனும்போது நான் எதுக்கு கோவிலுக்கு போகணும்? அல்லது நல்லவனா இருக்கணும்? எல்லாத்தையும் தூக்கி போட்டு மிதிச்சிட்டு முன்னுக்கு வர்ற வழியை பார்த்துட்டு போய்கிட்டே இருப்பேனே? எதுக்கு சார் இப்படி தினம் தினம் மனசாட்சிகூட போராடனும். எதிரிகள் கூட போடுற சண்டையை விட இந்த மனசாட்சி கூட போடுற சண்டையில தான் சார் நான் அதிகம் டயர்ட் ஆயிடுறேன்… (நமக்கு நாமே உண்மையா இருக்கிறது தாங்க ரொம்ப கஷ்டம்)” என்கிறீர்களா?
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லே… அவனை நம்பினவங்களை அவன் நிச்சயம் கைவிடமாட்டான்.. நீங்க நம்பிக்கையோட பிரார்த்தனை பண்ணுங்க… !” அப்படி இப்படின்னு நாம சமாதானம் சொன்னாலும், நமக்கும் அந்த சந்தேகம் உள்ளுக்குள்ளே இருந்துகிட்டு தான் இருக்கு… இல்லையா?
விதி என்பது இறைவன் கையில் உள்ள ஒரு கருவி… அது குறித்து நினைத்துக்கொண்டு நம்மை முடக்கிக்கொள்ள நமக்கு அதிகாரம் இல்லை என்பதே என் கருத்து. ஆகையால் தான் விதியை வென்று காட்டிக்கொண்டிருக்கும் பல சாதனையாளர்களை  நம் முன்னே நடமாடவிட்டுருக்கிறான் இறைவன். (உ.ம் : திரு.நந்தகுமார், திரு.இளங்கோ etc )
மற்றவர்கள் எப்படியோ எனக்கு தெரியாது. விதியை எண்ணி நான் என்றைக்குமே செயல்பட்டது கிடையாது. அவன் நமக்கு அளித்திருக்கும் இந்த வாழ்க்கையை அவன் மனம் கோணாதபடி வாழ்ந்து காட்டுவோம். மற்றபடி அவன் பார்த்துக்கொள்வான். ஆண்டவனுக்கு பிடிக்கிற மாதிரி வாழ்ந்துட்டு அதுல ஒரு வேளை நாம தோற்றால் அந்த பழி யாருக்கு? அந்த தோல்வி யாருக்கு? அவனுக்கு தானே? அப்போ நாம எதுக்கு சார் அலட்டிக்கணும்… அதே சமயம் அவன் இந்த முடிவு தான் எடுப்பான் என்று ஆரூடம் சொல்ல நாம் யார்? (எந்த ஜென்மாவுல பண்ண எந்த பாவத்தை நமக்காக அவன் டேலி  பண்றானோ? அது நமக்கு தெரியுமா?) இந்த சிற்றறிவை வைத்துக்கொண்டு அதை நாம் கூறலாமா? மாபெரும் ரிஷிகளாலும் யோகிகளாலும் கூட முடியாத விஷயமாயிற்றே அது.
சரி.. தொடங்கிய விஷயத்துக்கு வருகிறேன். இவ்வாறாக விதி குறித்தும் ஜாதகம், ஜோதிடம் குறித்தும் நமக்கு ஏற்படும் சந்தேகத்துக்கு மிகத் தெளிவான பதில் ஒன்றை சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்வாமிகள் அளித்திருக்கிறார். மிக மிக பெரிய ஒரு விஷயத்தை மிக எளிமையாக சுவாமிஜி விளக்கியிருக்கிறார்.
படியுங்கள். புரியவில்லையா? திரும்ப திரும்ப படியுங்கள். இன்னும் புரியவில்லையா? திரும்ப திரும்ப நிறுத்தி நிதானமாக உள்வாங்கி படியுங்கள்.

படைப்பின் ரகசியம் இது. வாழ்க்கையின் சூட்சுமம் இதுவே.

- See more at: http://rightmantra.com/?p=2311#sthash.aK4fS2PK.dpuf

No comments:

Post a Comment